கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காமராஜர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "நாகர்கோவில் அடுத்த பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜரின் சிலை அமைந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி இரவு காமராஜர் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் அரசின் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எனவே, இந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காமராஜர் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
மேலும், இதுபோல் நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.