கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சாலையில் காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வினோ பாஸ்மைல் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் முனைவர் சிலம்பு சுரேஷ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இறத்தவர்களை விட தொழில்கள் இழந்து வறுமையின் கோரப்பிடியால் உயிரிழந்தவர்கள் தான் அதிகம்.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை, தாய், மகள் வறுமையால் தற்கொலை செய்துள்ளனர். இது மத்திய, மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது. இப்படி இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசோ, மாவட்ட நிர்வாகமோ அனுதாபம் தெரிவிக்கைவில்லை.
கரோனா ஊரடங்கில் பட்டினியால் குமரி மாவட்டத்தில் 35 பேர் தற்கொலை செய்து உள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எந்த உதவியும் அரசு தரப்பில் செய்யாத நிலையில், வரும் 23ஆம் தேதி குமரி மாவட்டம் வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்" என்று கூறியுள்ளார்.