விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டயபுரம் அருணாச்சலபுரத்தில் காமராஜருக்கு 125 ஏக்கர் நிலப்பரப்பு தற்போது வாங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காமராஜரின் 125ஆவது பிறந்தநாளன்று, அவரது 125 அடி உயரச் சிலையின் திறப்புவிழா நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் அவரது பெயரில் உள் விளையாட்டரங்கம், நூலகம் போன்றவற்றை அமைத்து காமராஜரின் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படுகிறது. இதற்காகக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு வாகனப் பரப்புரை பயணம் காமராஜர் பொற்கோயில் அறக்கட்டளை நிறுவனர் சுரேஷ்குமார் தலைமையில் நேற்று கன்னியாகுமரி காமராஜர் மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது.
ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?
நேற்று தொடங்கிய இந்த பரப்புரை பயணம் வள்ளியூர், பாஞ்சாலங்குறிச்சி, பாண்டிச்சேரி, சென்னை, மும்பை, டெல்லி வழியாக வருகிற ஜனவரி 27ஆம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது.