கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் 1907ஆம் ஆண்டு பிறந்த ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோவிலில் ஆரம்ப கல்வி கற்றார். சாதி கொடுமைகள் தலைவிரித்து ஆடிய, அக்காலத்தில் பள்ளிப் பருவத்திலேயே ஜீவா தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.
தமிழ்நாடு முழுவதும் சென்று பொதுவுடமை சித்தாந்தங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார். அரசியல் வரலாற்றில் முதற்கட்டமாக தேச விடுதலைக்கும் சாதி கொடுமைகளுக்கும் எதிராகவும் குரல் கொடுத்த ஜீவானந்தம் 1952ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகி, சட்டமன்றத்திற்குச் சென்று பொதுவுடைமை கொள்கைகளுக்காக குரல் எழுப்பினார்.
பொது வாழ்வில் மக்களுக்காக வாழ்ந்த ஜீவானந்தம் 1963 ஜனவரி மாதம் 18ஆம் தேதி மறைந்தார். அவருடைய 57ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் முழங்கினர்.
இதையும் படிங்க: பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை