இந்திய பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மூன்றாயிரத்து 500 பேர் 'கன்னியாகுமரி ஜவான்ஸ்' என்ற அமைப்பின்கீழ் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை நான்கு வழிச்சாலையோரத்தில் சுமார் மூன்று கி.மீ. தூரத்துக்கு 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியைக் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் லௌலின்மேபா ஆகியோர் இணைந்து தொடங்கிவைத்தனர்.
மேலும், மகாதானபுரம் ரவுண்டானாவில் இந்தியா-சீனா எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்குக் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் துறையினர் அணிவகுப்பு மூலம் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க : டிவிஎஸ் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு!