கரோனா தடை உத்தரவில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
நிர்வாகச் சிக்கல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டதை அடுத்து குமரியில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
நாகர்கோவில் பணிமனையிலிருந்து 30 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் காய்கறிச்சந்தை இன்னும் அகற்றப்படாததால் அங்கு பேருந்துகள் நிறுத்தப்படவில்லை.
இதனால், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரி பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது.
ஓட்டுநர்கள் பூசணிக்காய் உடைத்து பேருந்தை இயக்கினர். பயணிகள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பேருந்தில் பயணம்செய்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு வரவேற்பு!