கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. பேருந்து போக்குவரத்தையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் மாநகர பேருந்துகளை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்துவருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.
ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5 ஆயிரம் ஊழியர்களில் 60 விழுக்காடு பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் மேலும், 300 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: 6-8 வாரங்களில் மூன்றாவது அலை!