கன்னியாகுமரி: வடக்கு தாமரைக்குளம் பகுதியில் பழைய ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்பட இருந்தது.
இதற்கு, விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 29) அந்தப் பகுதிகளை தமிழ்நாடு தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது,
'வடக்கு தாமரைக்குளம் பழையாற்றின் குறுக்கே ரூ.5.23 கோடியில் நடைபெறும் தடுப்பணை பணிக்கு இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தேன்.
தடுப்பணை கட்டுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால், இந்தத் திட்டம் கைவிடப்படும்.
திட்டத்தை செயல்படுத்த மேலும் ஒருமுறை துறைசார்ந்த உயர் மட்ட வல்லுநர்களால் ஆய்வு நடத்தப்படும். அப்போதும் இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால், இந்தத் திட்டம் முற்றிலும் கைவிடப்படும்' என்றார்.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்