ETV Bharat / state

தத்தளிக்கும் மீனவர்கள் - மீட்புப் பணி தீவிரம்!

author img

By

Published : Jun 4, 2019, 11:34 AM IST

கன்னியாகுமரி: கடலில் தத்தளித்துவரும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 20 மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

மீட்புப் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஷிபு என்பவருக்குச் சொந்தமான ஸ்டார் ஆப் ஷீ 1, ஸ்டார் ஆப் ஷீ 2 ஆகிய இரு விசைப்படகுகளில் கொச்சி துறைமுகத்திலிருந்து மே 2ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், குமரி மாவட்டம் சின்னதுரையைச் சேர்ந்த படகு உரிமையாளர் ஷிபு, டென்சன், ரிச்சர்டு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், கேரள மாநிலம் பொழியூரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் என 20 மீனவர்கள் படகிலிருந்தனர்.

மே 18ஆம் தேதி லட்சத்தீவில் இருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவின் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டார் ஆப் ஷீ 1 விசைப்படகு பழுதாகி நின்றது. இதனால் பக்கத்தில் மீன்பிடித்த ஸ்டார் ஆப் ஷீ 2 விசைப்டகு மூலம் பழுதான விசைப்படகில் சென்று இன்ஜினை சரிசெய்ய மீனவர்கள் முயன்றுள்ளனர்.

இதனால் அங்குள்ள தீவில் கரைசேரும் முயற்சியில் பழுதான படகை மற்ற விசைப்படகு மூலம் மீனவர்கள் கயிறுகட்டி இழுத்துக் கொண்டு வர முயன்றனர். ஆனால், இடையில் இரண்டாவது படகும் பழுதாகி நின்று தத்தளித்தது. கடலிலிருந்து தகவல் தெரிவிக்க செல்பேசி இணைப்புகள் கிடைக்காமல் இருந்தது.

அப்போது, விசைப்படகில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த நாட்டுப்படகு மூலம் அங்குள்ள சித்ரா என்ற தீவிற்குள் சென்று கடலோரக் காவல்படை, குமரி மீன்வளத் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் வேறு படகுகள் எதுவும் ஆழ்கடலில் நடமாட்டம் இன்றி இருந்தது.

இது குறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், மீனவ குடும்பத்தினர் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள், இந்திய கடற்படை ஆகியோர்களுக்கு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மீட்புப் பணி தீவிரம்
இதைத்தொடர்ந்து, இந்திய கடற்படையினர் விக்ரம் என்ற கப்பலில் லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் இரு விசைப்படகில் மீனவர்கள் தவிக்கும் பகுதிக்குச் சென்றனர். இந்நிலையில், லட்சத்தீவு அல்லது அருகில் உள்ள துறைமுக பகுதிகளில் மீனவர்கள் கரைசேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN_KNK_04_03_FISHERMAN_RECOVERY_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் பழுதாகி தமிழகம், ஆந்திரா, கேரள மீனவர்கள் 20 பேர் கடலுக்குள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி கடற்படை கப்பல் மூலம் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான ஸ்டார் ஆப் ஷீ 1, ஸ்டார் ஆப் ஷீ 2 ஆகிய இரு விசைப்படகுகளில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த மே மாதம் 2ம் தேதி ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த படகு உரிமையாளர் ஷிபு, டென்சன், ரிச்சர்டு, நாகப்பட்டிணத்தை சேர்ந்த 3 மீனவர்கள், ராமநாதபரத்தை சேர்ந்த 6 மீனவர்கள், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த 2 மீனவர்களும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 6 மீனவர்களும் என 20 மீனவர்கள் படகில் இருந்தனர். கடந்த 18ம் தேதி லட்சத்தீவில் இருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவின் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஸ்டார் ஆப் ஷீ 1 விசைப்படகு பழுதாகி நினறது. இதனால் அதில் இருந்த மீனவர்கள் தத்தளித்தனர். இதனால் பக்கத்தில் மீன்பிடித்த ஸ்டார் ஆப் ஷீ 2 விசைப்டகு மூலம் பழுதான விசைப்படகில் சென்று இன்ஜினை சரிசெய்ய மீனவர்கள் முயன்றுள்ளனர். இதனால் அங்குள்ள தீவில் கரைசேரும் முயற்சியில் பழுதான படகை மற்ற விசைப்படகு மூலம் மீனவர்கள் கயிறுகட்டி இழுத்து கொண்டு வர முயன்றனர். ஆனால் இடையில் 2வது படகும் பழுதாகி நின்று தத்தளித்தது. கடலில் இருந்து தகவல் தெரிவிக்க செல்பேசி இணைப்புகள் கிடைக்காமல் இருந்தது. அப்போது விசைப்படகில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த நாட்டுப்படகு மூலம் அங்குள்ள சித்ரா என்ற தீவிற்குள் சென்று கடலோர காவல்படை, குமரி மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் என்பதால் வேறு படகுகள் எதுவும் ஆழ்கடலில் நடமாட்டம் இன்றி இருந்தது. இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், மற்றும் மீனவ குடும்பத்தினர் தமிழக, கேரள முதல்வர், மற்றும் இந்திய கடற்படைக்கு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இந்திய கடற்படையினர் விக்ரம் என்ற கப்பலில் நேற்று லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் இரு விசைப்படகில் மீனவர்கள் தவிக்கும் பகுதிக்கு சென்றனர். நேற்று முழுவதும் 20 மீனவர்கள், மற்றும் 20 விசைப்படகுகளையும் கப்பல் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சென்று லட்சத்தீவு, அல்லது பக்கத்தில் உள்ள துறைமுக பகுதிகளில் கரைசேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.