ETV Bharat / state

அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் ; அச்சத்தில் குமரி மக்கள்!

author img

By

Published : Sep 13, 2020, 3:00 PM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளை, கொலை மிரட்டல், அரிவாள் வெட்டு போன்ற குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

increasing-looting-people-in-fear
increasing-looting-people-in-fear
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை, எளிய பொது மக்கள், தினக் கூலிகள் போன்றவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவுள்ளது. அதேபோல் கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக வீடுகள், கோயில்களில் கொள்ளை, அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குமரி மாவட்டம் ஜேம்ஸ் டவுன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சக நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள், அறிவாளை காட்டி மிரட்டி பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருள்ளை வழிப்பறி செய்த சம்பவம் காவல்துறையினரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தற்சமயம் கரோனா ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வினால், இரவு நேரங்களில் 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், அச்சமயத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:காதலித்து மணம் முடித்த மகள்: கோபத்தில் குடும்பத்தினர் செய்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.