கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(35). அவருக்கும் பிள்ளைதோப்பு அழிக்கால் பகுதியைச் சேர்ந்த ஜோஷி(32) என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் ஜோஷி விவகாரத்திற்காக விண்ணப்பித்து சதீஷ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவ்வாறு இருக்கையில் சதீஷ் நேற்று மதியம் ஜோஷி பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு அவரை நேரில் சந்தித்து பேசினார்.
பேச்சுவார்த்தையில் ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோஷியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் அவரை பொதுமக்கள் பிடித்து வடசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்கப்பட்ட ஜோஷிக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கோவை நகரில் பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள்!