குமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள வில்லுக்குறி அருகே உள்ள கரிஞ்சாங்கோட்டையைச் சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநர் ரதீஷ்குமார் (29). இவரது மனைவி மகாலட்சுமி (20).
இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கள்ளிகுளத்தில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, முப்பந்தல் கோயிலைக் கடந்து வழிமறிச்சான் கால்வாய் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போ ரதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், ரதீஷ்குமாரும் மகாலட்சுமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![Road accident couple death temo crashesmoter bike டெம்போ கணவன்,மனைவி kaniyakuimari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-knk-02-accident-double-death-image-7203868_27072019163741_2707f_1564225661_553.jpg)
இதையடுத்து, ராதாபுரத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர் ஜெஸீஸ் (33) என்பவரை ஆரல்வாய்மொழி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.