ETV Bharat / state

முயல் வேட்டையாடியவர்கள் கைது : ஒன்பது நாய்கள் பறிமுதல்

author img

By

Published : Aug 10, 2019, 6:31 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டியில் முயல் வேட்டையாடிய மூன்று நபர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்பது வேட்டை நாய்களை பறிமுதல் செய்தனர்.

முயல் வேட்டையாடிய மூன்று நபர்கள் கைது : ஒன்பது நாய்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டும் சோதனை சாவடிகள் அமைத்தும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி குமாரபுரம் வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வன ஊழியர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்ட ஆவரை குளம் பகுதியைச் சேர்ந்த இந்திரன், ராமகிருஷ்ணன், கேசவன் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட நாய்களை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டியில் முயல் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 வேட்டை நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் தீவிர விசாரணை.Body:குமரி மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான அரியவகை விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த வனப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி குமாரபுரம் வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து ஒரு கும்பல் முயலை வேட்டையாடி உள்ளனர்.முயல் வேட்டையின்போது வேட்டை நாய்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வன ஊழியர்கள் அப்பகுதியில் விரைந்து சென்று முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து முயல் மற்றும் 9 வேட்டை நாய்களை பறிமுதல் செய்தனர்.
வேட்டையில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேட்டையில் ஈடுபட்ட நபர்கள் ஆவரை குளம் பகுதியை சேர்ந்த இந்திரன், ராமகிருஷ்ணன், மற்றும் கேசவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.