கரோனாவிலிருந்து உலகம் முற்றிலும் விடுபடவும் அதற்கான மருத்துவத் துறை முயற்சி வெற்றிபெறவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளின் பூஜை அறைகளில் 41 நாள்கள் எள் வைத்து ம்ருத்யுஞ்சய மந்திரம் கூறி பூஜிக்கப்பட்டுவந்தது.
இந்த எள் உள்பட ஒன்பது திரவியங்களால் மஹா ம்ருத்யுஞ்சய யாகம் இன்று (ஜூலை 8) குழித்துறை திப்பிலங்காடு மஹா தேவர் கோயிலில் நடைபெற்றது. இந்த மஹா ம்ருத்யுஞ்சய யாகத்தில் பத்திற்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாக குண்டத்தில் மந்திரங்கள் ஒலிக்க எள் உள்பட திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு யாகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. இந்து கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு - கேரளாவைச் சேர்ந்த நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில், தில ஹோமம் செய்த விஜயகாந்த் குடும்பத்தினர்!