குமரி மாவட்டம் நாகர்கோயிலில் இந்து தமிழர் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட பொறுப்பாளர் ராகவேந்திர ராஜா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் ராம ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெய்வபக்தி, தேசபக்தி, இந்து சக்தி உருவாக்குவதற்காக குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அமைப்பின் கிளைகளைத் தொடங்க வேண்டும்.
பசு பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். கம்ப ராமாயணம் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் மணிமண்டபம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டபட வேண்டும்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்கள் சிலைகளையும் பாதுகாக்க சமத்துவபுரம் உருவாக்கியதுபோல சிலை பராமரிப்பு பூங்காக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சிலைகள் அவமதிப்பு கலவரங்கள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.