ETV Bharat / state

தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

author img

By

Published : Jan 13, 2020, 3:17 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், "தமிழ்நாட்டில் விவசாயம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டியும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் எங்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தோம்" என்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் மாணவ மாணவிகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.Body:குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், தமிழகத்தில் விவசாயம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டியும், விவசாயிகளை ஊக்கப்படுத்துவதை கருத்தில் கொண்டும், மக்களிடம் விவசாயத்தின் தேவையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பொங்கல் விழாவை நாங்கள் கொண்டாடினோம். மேலும் ஜாதி மத பேதத்தை ஒழிக்கும் வகையில் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினோம்.
 இவ்வாறு அவர்கள் கூறினர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.