ETV Bharat / state

4 மாவட்ட நீதிபதிகள் உள்பட காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!

author img

By

Published : Oct 24, 2020, 9:06 PM IST

கன்னியாகுமரி: நான்கு மாவட்ட நீதிபதிகள் உள்பட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.

High court chief justice visit
High court chief justice visit

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி இன்று (அக். 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, இரணியல், பத்மனாபபுரம், நாகர்கோவில் நீதிமன்றங்களில் திடீர் ஆய்வுமேற்கொண்டார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து கட்டடங்கள், பழமையான நீதிமன்ற கட்டடத்தின் நிலையைப் பார்வையிட்ட பின்னர், பழமையான நீதிமன்ற கட்டடத்தைப் புதுப்பிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி ஆய்வு

இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களுக்கு கூடுதல் அலுவலக கட்டடம், மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நான்கு நீதிபதிகள் பணியிடங்கள், கீழமை நீதிமன்றங்களில் ஐந்து நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிமன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் சேர்க்கை 31 வரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.