ETV Bharat / state

உயிரைக் காக்கும் தலைக்கவசம்: அனைவருக்கும் அவசியம்!

கன்னியாகுமரி: இருசக்கர வாகன ஓட்டுநர்களின் உயிர்க்கவசமான தலைக்கவசத்தை ஓட்டுநர்கள் அணிகிறார்களா? தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்பட்டால் எவ்வாறு காப்பாற்றப்படுவார்கள்? அணியாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன? ஒரு அலசல் அறிக்கை...

உயிரைக் காக்கும் தலைக்கவசம்
உயிரைக் காக்கும் தலைக்கவசம்
author img

By

Published : Jan 30, 2021, 2:46 PM IST

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பல்வேறுவிதமான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அதில், குறிப்பாக ஆண்டுதோறும் சாலை விழிப்புணர்வு, பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த விழிப்புணர்வின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் சாலையில் பயணிக்கும்போது தகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். இவை குறித்து பொதுமக்கள், பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தீவிர சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வருவோர் தலைக்கவசம் அணியாமல் வரும்பட்சத்தில் அபராதம் விதிப்பது, வாகனம் பறிமுதல்செய்வது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை குமரி மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளைவிட தற்போது இருசக்கர வாகன விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து குமரி மாவட்ட காவல் அலுவலர் கூறியதாவது, குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அந்த இடத்திலேயே அபராதம் கட்டும்பட்சத்தில் வாகனம் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

உயிரைக் காக்கும் தலைக்கவசம்

அபராதம் கட்டத் தவறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றங்களில் அபராதம் கட்டிய பின்னர் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுவருகின்றன. ஒருமுறை இருமுறை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட முறை தலைக்கவசம் அணியாமல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்யும்போது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பறிமுதல்செய்வது அல்லது ரத்துசெய்யும் நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 283 இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டன. இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதில் 40 பேர் உயிரிழந்தனர். 2020ஆம் ஆண்டில் 230 இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 23 பேர் தலைக்கவசம் அணியாமல் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து தலைக்கவச கடை உரிமையாளர் மகேஷ் கூறியதாவது, “வாகன ஓட்டிகள் தங்களது உயிர் பாதுகாப்பிற்காக தலைக்கவசம் வாங்கி அணிய வேண்டும். காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் மிகக்குறைந்த தரமற்ற தலைக்கவசத்தை வாங்கி அணிகின்றனர். இதனால், அவர்களது உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது.

தலைக்கவசம் அணியும்போது அது அரசின் ஐஎஸ்ஓ தர முத்திரை பெற்றுள்ளதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். மேலும், தரமான தலைக்கவசங்கள் விலை அதிகம் இருந்தாலும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும்.

ஒரு சிறு விபத்து ஏற்பட்டாலும் பெரிய அளவில் காயம் இல்லாமல் வாகன ஓட்டிகளைக் காப்பாற்றும். அதேநேரத்தில் தரமற்ற சாலையோர தலைக்கவசங்களைப் பயன்படுத்தும்பட்சத்தில் விபத்து ஏற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: மினி பஸ் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.