கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கோடை காலத்தில் வீடுகளுக்குள் ஒரே நேரத்தில் அனைவரும் இருப்பதால் வெப்பத்தினால் பொதுமக்கள் அதிக அவதிப்பட்டனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இன்று மதியம் முதல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது.
மலையோரப் பகுதிகள், நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில், தாழக்குடி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் தொடர் மழையினால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி மேலோங்கத் தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளுக்குள் முடங்கியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.