கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மோதிரமலையிலிருந்து குற்றியாறு செல்லும் தரைமட்ட பாலம் காட்டாற்று வெள்ளப்பெருக்கில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) மோதிர மலை, தச்சமலை, மாங்காமலை உள்ளிட்ட மேலும் ஆறு மலை கிராமங்களில் தரைமட்ட பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துண்டிக்கபட்ட மலை கிராமங்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் குற்றியாறு, தச்சமலை, மாங்காமலை உள்ளிட்ட 16 மலையோர கிராமங்களிலுள்ள மலைவாழ் மக்கள் கிராமங்களை விட்டு தொழில் ரீதியாகவோ, கல்வி நிலையங்கள் செல்லவோ, மருத்துவ சிகிச்சைகள் பெற மருத்துவமனைகளுக்கு செல்லவோ முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
மேலும் இந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற மலைவாழ் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வைத்து வந்த நிலையில், ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசு அதற்கான பணிகளை செய்வதற்கு முன் வரவில்லை என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட மூத்த தம்பதியினர் - பாடுபட்டுமீட்ட மீட்புத்துறை!