ETV Bharat / state

கோவிட்-19 எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!

குமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

govitt-19-echo-flowers-fall-in-the-toew-flower-market

author img

By

Published : Mar 20, 2020, 2:52 PM IST

கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகளவில் புகழ்பெற்றதாகும். இங்கு மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினம்தோறும் பூக்கள் வரத்து இருக்கும். அதேபோல் தோவாளை மலர் சந்தையிலிருந்து கேரளா மாநிலம், வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 8 டன் பூக்கள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மூன்று டன் பூக்களே வருகிறது என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

மேலும், தோவாளை மலர் சந்தியிலிருந்து கேரளா, வளைகுடா நாடுகளுக்கு 80 விழுக்காடு பூக்கள் ஏற்றுமதியான நிலையில், தற்போது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. அதேபோல் பூக்களின் விலையும் வழக்கத்தை விட கடும் வீழ்ச்சியை சந்துள்ளதால், தங்களது வாழ்வாதாரம் முற்றுலுமாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் கவலைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.