ETV Bharat / state

மாசிக்கொடை விழா கொடியேற்றம்:  தமிழிசை பங்கேற்பு

author img

By

Published : Mar 1, 2021, 3:45 PM IST

கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழாவில் பங்கேற்றார்.

மாசிக்கொடை விழா கொடியேற்றம்  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.

இதனால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் மாசிக்கொடை விழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.

பத்தாவது நாள் நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழாவில் தெலங்கனா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தார். ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் தமிழிசையை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "நம் நாட்டில் தயாரித்த கரோனா தடுப்பூசியை நாமே போட்டுக்கொள்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை. நம் நாட்டு தடுப்பூசியை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை.

கரோனா நம்மைவிட்டு முழுமையாக விலகவில்லை. அடுத்ததாக பொதுமக்களுக்கான தடுப்பூசி வர உள்ளது. பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விழுப்புரம் சாலையோர உணவகத்தில் உணவு உண்ட அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.