கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது அனைவரின் உரிமை. அதை வழங்கும் கடமை அதிகாரிகளுக்கு உண்டு, ஆனால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தால் அது மிக பெரிய தவறு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மக்களுக்கு வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டு இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. இதுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்று விசாரணை நடத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தோல்வி அடைவது உறுதி தோல்விக்கு காரணம் தேடும் வகையில் எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். இந்த முறை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு செயற்கை அறிக்கையாகவே மக்கள் பார்க்கிறார்கள். அதில் உள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற முடியாதவையாகவே உள்ளது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கிறதோ அதில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக தண்டிக்கபட வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகள் தான்” என்று கூறினார்.