கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் பணி, இயக்கப்பணி இவை இரண்டிற்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து வருபவர் தமிழிசை சௌந்தரராஜன் என்றும் பாரதிய ஜனதா கட்சி வளர வேண்டும் என கடின உழைப்பை மேற்கொண்டு அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு ஆளுநர் பதவி கொடுத்து அக்கட்சி கவுரவப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வங்கி இணைப்பு திட்டத்தால் வங்கி ஊழியர்களுக்கு உடனடி பாதிப்புகள் இருந்தாலும் நாளடைவில் அவர்களுக்கே இது நன்மை பயக்கும் திட்டமாக மாறும் என்றார். முதலமைச்சர் வெளிநாடு பயணத்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் எனவும் வாசன் தெரிவித்துள்ளார்.