கன்னியாகுமரி: குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் சாலையோர டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று கடையில் உணவு தயார் செய்வதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்த போது எரிவாயு கசிந்து திடீரென தீ பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன் கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரியத் தொடங்கியது. உடனே கடையில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இரும்பு தகரங்களால் அமைக்கப்பட்டிருந்த கடையானதால் அதிகளவில் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி அறிக்கை... ஆறுமுகசாமி ஆணையம் நாளை தாக்கல்