கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகள் அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பினர் இந்து, கிறிஸ்தவ முறைப்படி இரண்டு ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசையுடன் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அருமனை பகுதியில் உள்ள புண்ணியம் கிருஷ்ணா ஆடிட்டோரியத்தில் கிறிஸ்தவ பொதுநல அமைப்பு செயலாளர் டார்வின் கான்ஸ்டன், தலைவர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் இரண்டு ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அப்போது இரண்டு புதுமண தம்பதிகளுக்கு தலா 5 பவன் தங்க நகை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வங்கி மூலம் டெப்பாசிட் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் 1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவி