தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக விளங்கிய மறைந்த கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கட்ட சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல் பணி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு முகக்கவசங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.
’மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம்’ சார்பில் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதையும் படிங்க: பொது இடத்தில் ஆபாச சொற்கள்: காவலரின் காணொலி வைரல்