ETV Bharat / state

கையூட்டு வாங்கிய நான்கு காவலர்கள் பணி நீக்கம்!

கன்னியாகுமரி: மணல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், பெண் ஆய்வாளர், பறக்கும் படை எஸ்.ஐ உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்ய, காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நான்கு காவலர்கள் கைது
author img

By

Published : Sep 6, 2019, 11:01 PM IST

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு - கேரள எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்டம் வழியாக, கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதைத் தடுக்க, 33 இடங்களில் சோதனை சாவடிகள்அமைக்கப்பட்டது.

கையூட்டு வாங்கிய நான்கு காவலர்கள் கைது

இந்நிலையில், சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் அலட்சியமாக இருப்பதைத் தடுக்கும் வகையிலும், குமரி மாவட்டத்துக்குள் முறைகேடாக மணல் கொண்டு வருவதைத் தடுக்கவும், காவல்துறை சார்பில் எஸ்.ஐ செந்தில்வேல் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது.

ஆரல்வாய் மொழி சாவடி அருகே புதுச்சேரியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, செந்தில்வேல் தலைமையில் அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த வனிதா ராணி வழக்கு பதிவு செய்யாமல், பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணல் கொண்டு வந்தவர், தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும், காவல் துறையினர் பணத்துக்காக தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு, காவல்துறை உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி, ஆய்வாளார் வனிதா ராணி, பறக்கும் படை சார்பு ஆய்வாளர் செந்தில்வேல், காவலர்கள் ரமேஷ், ஜோஸ் ஆகிய நான்கு பேரை காவல்துறை பணியில் இருந்து நீக்கம் செய்ய, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மணல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், பெண் இன்ஸ்பெக்டர், பறக்கும் படை எஸ்.ஐ., உள்பட 4 பேரை காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்து, காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.Body:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்டம் வழியாக, கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க, 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில் போலீசார் அலட்சியமாக இருப்பதை தடுக்கும் வகையிலும், குமரி மாவட்டத்துக்குள் முறைகேடாக மணல் கொண்டு வருவதை தடுக்கவும், காவல்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. கடந்த 2017ல் எஸ்.ஐ., செந்தில்வேல் தலைமையில் பறக்கும் படை செயல்பட்டு வந்தது.

கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி, இவர்கள் ஆரல்வாய் மொழி சாவடி அருகே பாண்டிச்சேரியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லாரியை மடக்கினர். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, செந்தில்வேல் தலைமையில் அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உடனே வழக்கு பதிவு செய்யாமல், பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த வனிதா ராணியும் வழக்கு பதிவு செய்யவில்லை. திடீரென 3 நாள்களுக்கு பின்னர், லாரியை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கப்பட்டு விடுவித்தனர். இந்நிலையில், மணல் கொண்டு வந்தவர், தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும், போலீசார் பணத்துக்காக தன்னிடம் பேரம் பேசியதாக கூறி, லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் அப்போதைய எஸ்.பி.யாக இருந்த தர்மராஜன், எஸ்.ஐ., செந்தில்வேல் உள்ளிட்டோரை பறக்கும் படையில் இருந்து விடுவித்ததோடு, அந்த பறக்கும் படையும் கலைத்தார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பான விசாரணை நடத்தினர். பறக்கும் படையில் இருந்த போலீசாரின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணித்தனர். அவர்களின் செல்போன் அழைப்புகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம், டி.ஜி.பி.,க்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதில் பேரம் பேசப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த பிரச்னை தொடர்பாக, இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, பறக்கும் படை சப் இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்வேல், ஏட்டுகள் ரமேஷ், ஜோஸ் ஆகிய 4 பேரை காவல்துறை பணியில் இருந்து நீக்கம் செய்து, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இவர்களில் வனிதா ராணி, தற்போது விருதுநகர் மாவட்டத்தில் பணியில் உள்ளார். எஸ்.ஐ., செந்தில்வேல், நாகர்கோவில் டிராபிக்கில் உள்ளார். ஏட்டு ரமேஷ் கோட்டாரிலும், ஜோஸ் குளச்சலிலும் பணியில் உள்ளனர். மணல் விவகாரத்தில் பேரம் பேசியதாக 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.