ETV Bharat / state

'கோடு வேர்ட்’ மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - நான்கு பேர் கைது

கன்னியாகுமரி: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த நான்கு பேர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Nov 14, 2019, 7:16 AM IST

Four arrested for selling cannabis to school and college students, 'கோடு வேர்டு' மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, நான்கு பேர் கைது

நேற்று(13.11.2019) காலை வடசேரி எஸ்.எம்.ஆர்.வி பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பானை ரவி, டேனியல் மற்றும் காமராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன், ஜெகன் என்பது தெரியவந்தது. "கஞ்சாவை உசிலம்பட்டியில்(மதுரை) இருந்து அதிக அளவில் வாங்கி வந்து, அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Four arrested for selling cannabis to school and college students, 'கோடு வேர்டு' மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, நான்கு பேர் கைது

கஞ்சாவை கடத்தும்போது காவலர்களிடம் சிக்காமல் இருக்க, இக்கடத்தல் குழுவினர் தங்களுக்குள் தனி 'கோடு வேர்ட்' பயன்படுத்தி உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வாறே விற்பனைக்கும் தனி 'கோடு வேர்ட்' வைத்து அதிக அளவில் விற்பனை செய்து வந்ததாகவும்," ஏ. எஸ். பி ஜவகர் தெரிவித்தார்.

அண்மையில் கஞ்சா வியாபாரிகள் ஏழு நபர்கள் மீது நாகர்கோவிலில் குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாரியில் கஞ்சா கடத்திய மூன்றுபேர் கைது

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை. நாகர்கோவிலில் நான்கு பேர் கைது. நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்.கஞ்சாவை கடத்த தனி டெக்னிக் கோட் வார்த்தை, விற்பனைக்கு தனி கோட் வார்த்தை வைத்து அதிக அளவில் கடத்தி விற்பனை செய்வதாக ஏ. எஸ். பி தகவல்.Body:tn_knk_02_kanja_kadathal_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை. நாகர்கோவிலில் நான்கு பேர் கைது. நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்.கஞ்சாவை கடத்த தனி டெக்னிக் கோட் வார்த்தை, விற்பனைக்கு தனி கோட் வார்த்தை வைத்து அதிக அளவில் கடத்தி விற்பனை செய்வதாக ஏ. எஸ். பி தகவல்.

தமிழகத்தில் இளைஞர் சமுதாயம் கஞ்சா, மது, போதை ஊசிகளால் சீரழிந்து வருகிறது. இதனால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விற்பனையை தடுக்க அரசு கண்டு கொள்ளாததால் மக்கள் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து கஞ்சா, போதை ஊசி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. போலிஸ் அவ்வப்போது விற்பனை செய்பவர்களை பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்ததும் தங்கள் வேலை முடிந்ததாக இருந்து விடுகின்றனர். ஆனால் தினமும் தொடர்கதையாக விற்பனை நடந்து வருகிறது. அண்மையில் கஞ்சா வியாபாரிகள் ஏழு மீது நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வடசேரி எஸ்.எம்.ஆர்.வி பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பானை ரவி, டேனியல் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த கண்ணன், ஜெகன் என்பதும் தெரிய வந்தது. கஞ்சாவை உசிலம்பட்டியில் இருந்து அதிக அளவில் வாங்கி வந்து, அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும், கஞ்சாவை கடத்த தனி டெக்னிக் கோட் வார்த்தை, விற்பனைக்கு தனி கோட் வார்த்தை வைத்து அதிக அளவில் கடத்தி விற்பனை செய்து வருவதாக ஏ. எஸ். பி ஜவகர் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.