கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த வாகைவிளை பகுதியில் உரிய அனுமதியின்றி கிளிகள் வளர்த்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாவட்ட வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் உரிய அனுமதி எதுவும் பெறாமல் கிளிகளை வளர்த்துவந்த நான்கு பேரிடமிருந்து, அலெக்சாண்டர் மற்றும் நாட்டு இனத்தைச் சேர்ந்த 130 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் அனைத்தும் உதயகிரி கோட்டையில் செயல்பட்டுவரும் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், அனுமதியின்றி கிளிகளை வளர்த்துவந்த நான்கு பேருக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிலும் கொரோனாவா?' தேனியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் மருத்துவமனையில் அனுமதி