கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரபலமானதாகும். இந்த மலர் சந்தையிலிருந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்னதாக பூக்களின் வரத்து குறைந்த காரணத்தால் பூக்களின் விலை உச்சத்திற்கு போனது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளன. இந்தக் காரணத்தால் பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பூக்களின் விலை பட்டியல் :
மல்லிகை பூ (ஒரு கிலோ) - ரூ. 200
பிச்சிப் பூ (ஒரு கிலோ) - ரூ. 100
கனகாம்பரம் (ஒரு கிலோ) - ரூ.150
இதேபோல் ரோஜா, தாமரை உள்ளிட்ட பூக்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டுவருகிறது.