கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர்ச்சந்தை தமிழ்நாடு அளவில் புகழ் வாய்ந்தது. இங்கு மதுரை, திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் தினந்தோறும் பல டன் பூக்கள் வரும்.
அதேபோல், கேரளா மாநிலம் உள்பட பல பகுதிகளுக்குத் தோவாளை மலர்ச்சந்தையிலிருந்து பூ ஏற்றுமதியும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்ப் புத்தாண்டும் குமரி மாவட்டதில் கோயில்கள், வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவதாலும் தோவாளை மலர்ச் சந்தையில் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்று (ஏப். 13) கிலோ ஒன்றிக்கு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ இன்று 1750 ரூபாயாகவும், மல்லிகைப்பூ 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், வாடாமல்லி 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், அரளி 140 ரூபாயிலிருந்து 200 ரூபாய், தாமரை ஒன்று 5 ரூபாய், மரிக்கொழுந்து 80 ரூபாய் என அனைத்து வகைப் பூவின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் தோவாளை மலர்ச் சந்தை பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மல்லிகை பூ விலை குறைய வாய்ப்பு!