ETV Bharat / state

குமரியில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு! - கடல்

கன்னியாகுமரி: கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவுபெற உள்ள நிலையில், ஜுலை 15ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்ல உள்ளனர்.

fishing barrier
author img

By

Published : Jun 14, 2019, 10:09 AM IST

மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடைக்காலம் குமரியில் இரண்டு பருவங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி சின்னமுட்டம் கிழக்கு கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கிறது. மேற்கு கடற்கரைப் பகுதியான ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இணையம் உள்ளிட்ட பகுதிகளில் மே 31ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த இருமாத கால இடைவெளியில் விசைப்படகுகளை நங்கூரமிட்ட பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், மீன்வலை பின்னுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தைத் தளமாகக் கொண்டு தற்போது 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், முதல் பருவக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு அடைவதால், நாளை முதல் வழக்கம்போல் காலை ஐந்து மணிக்கு மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல உள்ளனர். இங்கு கிடைக்கும் மீன்களை கேரள மாநிலம், நெல்லை, குமரி மாவட்ட மீனவர்கள் வாங்க குவிவார்கள். வானிலை ஆய்வு மையம் சுமார் 4.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும் என்பதால் ஜுன் 14ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவு

Intro:
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது இதையடுத்து வருகிற 15-ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்கின்றன.

Body:கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து வருகிற 15-ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்கின்றன.

கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது இந்த மீன்பிடி தடை காலம் குமரியில் 2 பருவங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது கன்னியாகுமரி சின்னமுட்டம் கிழக்கு கடலோரப் பகுதியில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியான ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இணையம் உள்ளிட்ட பகுதிகளில் மே 31ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது .சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு தற்போது 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் முதல் பருவ காலம் நாளையுடன் நள்ளிரவுடன் நிறைவு அடைகிறது கடந்த இரு மாத காலத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை நங்கூரமிட்டு பழுதுபார்த்தல் வர்ணம் பூசுதல் மீன் வலை பின்னுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர் இந்நிலையில் தடைகாலம் நாளையுடன் நிறைவு பெறுவதால் விசைப்படகுகளை தயார்செய்யும் இறுதிக்கட்ட பணிகளில் சின்ன பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதால் மீன்களை பதப்படுத்தும் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பியதும் வருகிற 15-ஆம் தேதி இரவு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வியாபாரிகள் கூட்டத்தால் களைகட்டும் எங்கு கிடைக்கும் மீன்களை வாங்க கேரள மாநிலம் மற்றும் நெல்லை ,குமரி மாவட்ட மீனவர்கள் குவிவார்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மீன் வரத்து அதிகமாக இருக்கும் என்றும் மீனுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விசைப்படகு உரிமையாளர்கள் உள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே சுமார் 4.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும் என்பதால் ஜூன் 14-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.