கன்னியாகுமாரி: தூத்தூரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பென்சிகர் என்பவருக்கு சொந்தமாக விசைப்படகு ஒன்று உள்ளது. இதில் தூத்தூரை சார்ந்த சுர்லிங், சஜின், சுஜின்குமார், கெஜின் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 மீனவர்கள் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் மார்ச் மாதம் 10 ஆம் தேதி விசைப்படகிலுள்ள முக்கியமான பகுதியான எஞ்சின் ப்ளாக் சேதமடைந்துள்ளதால், விசைப்படகு நகர முடியாமல் 11.33 N, 71.47 E என்ற நிலையில் தத்தளித்தது. இத் தகவலை விசைப்படகிலிருந்த மீனவர்கள் சேட்டிலைட் போன் மூலம் விசைப்படகின் உரிமையாளர் பென்சிகர் வழியாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணிக்கு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜஸ்டின் ஆண்டனி தமிழ்நாடு முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை இயக்குநர், மாவட்ட கலெக்டர், கடலோர காவல்படை ஆகியோருக்கு இப்படகை மீட்டு கரைக்கு கொண்டுவர வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம்!