ETV Bharat / state

ஓகி புயல் நினைவு தினம்: கடற்கரையில் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Fishermen org paid tribute by sprinkling flowers

அரபிக்கடல் பகுதிகளில் ஒகி புயல்(Ockhi cyclone) தாக்கி 224 மீனவர்கள் பலியான சம்பவத்தின் 5-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு குளச்சல் உட்பட கடற்கரை கிராமங்களில் மீனவ அமைப்புகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு 5வது ஆண்டு தின அஞ்சலி

author img

By

Published : Nov 30, 2022, 7:34 PM IST

கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட ஒகி புயலின் தாக்கம் சுமார் 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக கடற்கரை கிராமங்கள் முதல் நகரப் பகுதிகளிளும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்காததால் கரை ஒதுங்க முடியாமல் குமரி மாவட்டத்தை சேர்ந்த 177 மீனவர்கள் வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கினர்.

மேலும், குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உட்பட 224 மீனவர்கள் பலியானார்கள். தற்போது அவர்கள் பலியான 5-வது ஆண்டு தினம் இன்று (நவ.30) கடற்கரை கிராமங்களில் அஞ்சலி நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு சார்பாக கடலில் விசைப்படகில் சென்று பிரார்த்தனைகள் செய்து கடலுக்குள் மலர்கள் தூவினர். பின்னர் இறந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி ’கடல் வீரர்கள் தினம்’ என்ற வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

ஓகி புயல் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்த மீனவர்கள் இறக்கவில்லை, மூன்று நாட்கள் உயிருக்கு போராடி கடலில் செத்து மிதந்தார்கள். உரிய நேரத்தில் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் கொண்டு அவர்களை மீட்கப்பட்டிருந்தால் உயிருடன் காப்பாற்றியிருக்கலாம் என தெற்காசிய மீனவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு 5வது ஆண்டு தின அஞ்சலி

இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக மீனவர்கள் மீட்கப்பட வேண்டும். அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான குமரியில் ஹெலிகாப்டர் வசதி, கப்பல் வசதி, கடல் ஆம்புலன்ஸ் போன்ற வசதிகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என இந்த அஞ்சலி நாளில் அருட்பணியாளர் சர்ச்சில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்.. முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.