ETV Bharat / state

மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்!

கன்னியாகுமரி: கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகியுள்ள ஐந்து மீனவர்களை சக மீனவர்கள், கடலோரக் காவல் படையினர் தேடிவருகின்றனர்.

Fishermen missing due to sea wind;Coast Guard searching!
author img

By

Published : Jul 19, 2019, 6:11 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி பகுதியைச் சேர்ந்த மீனவர்களான ஸ்டான்லி (47), ஜான் போஸ்கோ (46), சகாயம் (32), நிக்கோலஸ் (40), ராஜு (50) ஆகிய ஐந்து மீனவர்களும் கடந்த 13ஆம் தேதி கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகரை துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

மாயமான மீனவர்களின் புகைப்படங்கள்.
மாயமான மீனவர்களின் புகைப்படங்கள்.

இந்நிலையில், கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரைக்கு திரும்பாமல், கடலில் நங்கூரமிட்டு படகை நிறுத்தியுள்ளனர். இன்று காலை மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு சிதைந்த நிலையில் கடற்கரை ஓரமாக ஒதுங்கியது. அதிலிருந்த 5 மீனவர்களும் மாயமாகி இருந்தனர்.

கடல் சீற்றத்தால் மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்

இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலோர காவல் படை போலீசாரும், சக மீனவர்களும் மாயமான மீனவர்களைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் அருட்தந்தை சர்ச்சில், மாயமான 5 குமரி மாவட்ட மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நீரோடி துறையில் இருந்து கேரள கடலில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் சூறைக்காற்றில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் கடலில் தேடி வருகின்றனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி துறையை சேர்ந்த மீனவர்களான ஸ்டான்லி 47, ஜான் போஸ்கோ 46, சகாயம் 32, நிக்கோலஸ் 40, ராஜு 50 ஆகிய ஐந்து மீனவர்களும் கடந்த 13ம் தேதி கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்ட கரை துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் கடலில் கடுமையான சூறைக்காற்று எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நேற்று இரவு துறைமுகத்திற்கு கரை திரும்பினர். இரவு 11.30 மணியளவில் நீண்ட கரை துறைமுகத்திற்கு நுழைய முற்பட்டபோது கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது.
இதனால், அவர்களால் துறைமுகத்திற்குள் நுழைய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் தணிந்ததும் கரை திரும்ப முடிவெடுத்த மீனவர்கள், கடலில் நங்கூரமிட்டு படகை நிறுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு சிதைந்த நிலையில் கடற்கரை ஓரமாக ஒதுங்கியது. அதிலிருந்த 5 மீனவர்களும் மாயமாகி இருந்தனர். இதனை தொடர்ந்து வேறு படகுகளில் அவர்களுடன் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான 5 மீனவர்களையும் தேடி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படை போலீசாரும் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.
தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் அருட்தந்தை சர்ச்சில், மாயமான 5 குமரிமாவட்ட மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.