கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த நியூட்டன், எஸ்களின், வினிஸ்டன்,விவேக், சாஜன்,கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் உட்பட ஒன்பது பேர் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏமன் நாட்டில் சுல்தான் என்பவரால் மீன்பிடித் தொழிலுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த ஒன்பது மீனவர்களும் ஒரு வருடமாக அரேபிய முதலாளிக்காக ஏமன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். ஒருவருடமாக அரேபிய முதலாளியின் அச்சுறுத்தலுக்கு பயந்து தாங்கள் உழைத்த உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இந்த மாதம் 19ஆம் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகில் அங்கிருந்து தப்பித்து இந்தியா நோக்கி கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் வந்து சேர்ந்துவிடுவோம் என கூறியுள்ளனர்.
எனவே, ஒன்பது மீனவர்களையும் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்டு கரை சேர்க்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் கடலில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: