ETV Bharat / state

மனைவி மீது டார்ச் லைட் அடித்ததைத் தட்டிக்கேட்ட கணவர் வெட்டிக்கொலை! - murder

கன்னியாகுமரி: மனைவி மீது டார்ச் லைட் அடித்ததைத் தட்டிக்கேட்ட கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது டார்ச் லைட் அடித்ததைத் தட்டிக்கேட்ட கணவர் வெட்டிக்கொலை...!
author img

By

Published : Apr 25, 2019, 8:24 AM IST

கன்னியாகுமரி அருகேயுள்ள மேல மணக்குடி லூர்து நகரைச் சேர்ந்த மீனவர் வின்சென்ட் (34). இவரது மனைவி தஸ் நேவிஸ் மேரி சஜினி (24). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வின்சென்ட் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற கீழமணக்குடியைச் சேர்ந்த கிதியோன் என்பவர் வின்சென்ட் மனைவிமீது டார்ச் லைட் அடித்துள்ளார். இதனைப் பொறுக்க முடியாத வின்சென்ட் டார்ச் லைட் அடித்த கிதியோன் என்பவரைத் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிதியோன் நள்ளிரவில் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்டை அரிவாள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்து, பலத்த காயமடைந்த வின்சன்ட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக வின்சென்ட் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வெட்டிக் கொலை செய்த கிதியோனையும், அவருக்கு உதவிய 10 நண்பர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மனைவி கண்ணெதிரே கணவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கன்னியாகுமரி அருகே மணக்குடியில் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்ததை தட்டிக்கேட்ட கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Body:கன்னியாகுமரி அருகே மணக்குடியில் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்ததை தட்டிக்கேட்ட கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே மணக்குடி மீனவ கிராமம் இங்குதான் பழையாறு பொழிக்கரை வாயிலாக கடலில் கலக்கிறது. இதனால் கிழக்கே உள்ள பகுதியை கீழமணக்குடி என்றும் மேற்கே உள்ள மணக்குடியை மேல மணக்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மேல மணக்குடி மீனவர் கிராமம் ஆனது அழகான கடற்பரப்பையும் அன்பான மீனவர்களையும் அதிகமாக கொண்டுள்ளது. இங்கு குற்றச் செயல்கள் நடப்பது என்பது குறைவாகக் காணப்படும். எந்த பிரச்சினை என்றாலும் அவர்களுக்குள்ளாகவே பேசி முடிப்பார்கள். இந்நிலையில் நேற்று மேல மணக்குடி லூர்து நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் வயது 34 மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு23வயதில் ஒரு பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .இவர் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது சாலையில் சென்ற கீழமணக்குடி யை சேர்ந்த கிதியோன் வின்சென்ட் மனைவிமீது டார்ச் லைட் அடித்துள்ளார் .இதனை வின்சென்ட் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கிதியோன் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்டை தாக்கி அரிவாள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலமணக்குடி மீனவ கிராமத்தில் மனைவி கண்ணெதிரே கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 10 பேரை தேடி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.