கன்னியாகுமரி அருகே தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, ஒரு விசைப் படகில் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றுள்ளனர். மீன்பிடித்து விட்டு இரவு துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
அப்போது, விசைப்படகில் ஓரமாக நின்று கொண்டிருந்த கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த சகாயம் 45 என்னும் மீனவர் எதிர்பாராவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு சக மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் இறங்கி, அவரை மீட்க முறன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், புதுக்கடை காவல் நிலையத்திற்கும், தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீனவரின் உடலைத் தேடினர். பல மணி நேரத் தேடலுக்குப் பின்னர், அவருடைய உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலுக்குச் சென்று திரும்பிய மீனவர் கரை வந்தபொழுது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா? 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்!