ETV Bharat / state

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து...! - ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை, 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Fire
Fire
author img

By

Published : Jan 25, 2020, 12:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினம்தோறும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Fire

மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் அங்கிருந்த மருத்துவ உபகரணகள் எரிந்து நாசமாயின. மேலும், தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலாளியை நம்பிச் சென்றவரிடம் பணம் பறித்த கும்பல்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தீவிபத்து. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.Body:குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சுமார் 50 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் தனிச் பிரிவுடன் சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர்மண்டி செடி கொடிகளுடன் காணப்பட்டு வந்தது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும் அங்கு இருந்த மருத்துவ உபகரண பொருட்கள் எரிந்து சாம்பலானது. மேலும் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.