கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழிலையே நம்பி உள்ளனர். இந்நிலையில், கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன் பிடி தடை காலம் இருந்து வருகிறது. இந்த தடைகாலம் வருகிற 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைபோல், மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஒரு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தடைகாலம் சுமார் 60 நாட்கள் நீடிக்கிறது.
இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது அப்படிச் சென்றால் எரிபொருள் மானியம் தரப்படமாட்டாது என மீன்வளத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஐந்தாயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது:
"மாதத்தில் நாங்கள் சில நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க முடிகிறது. மற்ற நாட்களில் பலத்த காற்று, கடல் சீற்றம், புயல், மழை எனக் கூறி மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்கின்றனர். வருடத்திற்கு இரண்டு மாதங்கள் தடைகாலம் என்பதால் அப்போதும் மீன்பிடிக்கச் செல்ல முடிவதில்லை. உடல்நிலை சரியில்லாமல் சில நாட்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல முடிவதில்லை. எனவே, நிவாரண தொகையை 15000 மாக அதிகரித்து அரசு எங்களுக்குத் தர வேண்டும்" என மீனவர்கள் தெரிவித்தனர்.
நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை!
கன்னியாகுமரி: மீன்பிடித்தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.