ETV Bharat / state

பெண்களுக்கிடையே கரண்டி சண்டை: வீடியோவால் ஒருவர் கைது! - Tamil news

குருந்தன்கோடு அருகே பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்குள் கரண்டி சண்டை
பெண்களுக்குள் கரண்டி சண்டை
author img

By

Published : Jun 18, 2021, 9:18 PM IST

கன்னியாகுமரி: குருந்தன்கோடு அருகே பெண்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன்.18) மீண்டும் இருவருக்கும் வாய்த்தகறாறு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்குள் கரண்டி சண்டை

இதில் ஆத்திரமடைந்த புஷ்பம், கையில் வைத்திருந்த நீண்ட கரண்டியால் கவிதாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தொடர்ந்து இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடமும் இரணியல் காவல் துறையினர் விசாரணை நடத்தத் தொடங்கினர்.

இந்த விசாரணையில், நீண்ட நாள்களுக்கு முன்பே புஷ்பம் பக்கத்து வீட்டினரோடு தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று முன் விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சிவ மாலினி என்பவரை புஷ்பம் தாக்கியபோது கவிதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கவிதாவை புஷ்பம் கரண்டியால் அடித்து கீழே தள்ளி விட்டு, தொடர்ந்து சரமாரியாகத் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து புஷ்பத்தின் மீது வழக்குப் பதிவு செய்த இரணியல் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க: எடியூரப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.