மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகள் அடிமையாகும் சூழ்நிலை உருவாகும், விளைபொருளுக்கு விவசாயி விலை நிர்ணயம் செய்ய முடியாமல் பெரிய நிறுவனங்களை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே, இந்தச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் காலபெருமாள் தலைமையில் தேரூர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை தொடங்கினார்.
இதில் ஏராளமான விவசாயிகளும் கையெழுத்திட்டனர். ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்ற பின்னர் விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.