ETV Bharat / state

நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணி தொடக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி - Harvesting of Kanye Kumari rice crops

கன்னியாகுமரி: நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணி தொடக்கம்
நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணி தொடக்கம்
author img

By

Published : Feb 4, 2020, 12:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்தாண்டு இறுதி மாதங்களில் பருவமழை போதிய அளவு பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பின. இதனால் தண்ணீர் இல்லாமல் இருந்த விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

குளத்துப் பாசனம் மட்டுமின்றி ஆற்று பாசனம் மூலமும் மாவட்டத்தில் உள்ள ஆறாயிரத்து 500 ஹெக்டேர் வயல் வரப்புகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

ஏற்கனவே, தரிசாகக் கிடந்த இரண்டாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வயல் வரப்புகளில் நான்கு மாதங்களுக்கு முன்னரே நெல் நடவு பணிகள் முடிந்தன. தற்போது அவை அறுவடை பருவத்தை எட்டியுள்ளன.

நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணி தொடக்கம்

குறிப்பாக மயிலாடி, செண்பகராமன்புதூர், பறக்கை உள்ளிட்ட வயல் பரப்புகளில் நெல்மணிகள் விளைந்து பொன் நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இதில் முதல்கட்டமாக மயிலாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் இயந்திரம் மூலம் பரபரப்பாக நடந்துவருகிறது.

இனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நெல் அறுவடை பணிகள் நடைபெற உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட் ஏமாற்றம்: டெல்டா விவசாயிகளின் கருத்து!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் முன்கூட்டியே சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இனி மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Body:குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் பருவ மழை போதிய அளவு கைகொடுத்ததால், நீர்நிலைகள் நிரம்பின. இதனால் தண்ணீர் இல்லாமல், நெல் பயிர் செய்யாமல் இருந்த விவசாயிகள் சாகுபடி பணியில் பரவலாக ஈடுபட்டனர்.

குளத்து பாசனம் மட்டுமின்றி ஆற்று பாசன பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள 6500 ஹெக்டேர் வயல் வரப்புகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த மாதம் தொடக்கத்தில், இறுதிகட்டமாக நடவு பணிகள் பல இடங்களில் நடந்தன.

அதேநேரம் கன்னி பூவிற்கு தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்யாமல் தரிசாக கிடந்த 2000 ஹெக்டேர் மேற்பட்ட வயல் வரப்புகளில் 4 மாதங்களுக்கு முன்னரே நெல் நடவு பணிகள் நடந்தன. தற்போது அவை அறுவடை பருவத்தை எட்டி உள்ளன. குறிப்பாக மயிலாடி, செண்பகராமன்புதூர், பறக்கை உள்ளிட்ட வயல் பரப்புகளில் நெல்மணிகள் விளைந்து பொன் நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இதில் முதல் கட்டமாக மயிலாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம் அறுவடை பணி பரபரப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இனி தொடர்ச்சியாக நெல் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.