கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது உலக்கை அருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி அடர் வன பகுதியில் உள்ளது. இங்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை உள்ளது.
கடந்த ஞாயற்றுக்கிழமை நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பம் துவச்சி சட்டர் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
இதில் சுற்றுலா சென்ற ஆறு பேரும் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் கிருஷ்ணன் ( 21) தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடி மீட்டார்.
அவரின் வயிற்று பகுதியில் கயிறு இறுகியதில் மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இளைஞருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு