ETV Bharat / state

எப்போது வரும் ’நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்’? எதிர்பார்ப்பில் குமரி மக்கள்

author img

By

Published : Aug 17, 2019, 7:58 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே இயக்கப்படும் ரயிலை, ”நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

எப்போ வரும் நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ் ரயில்?

சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு குமரி மாவட்ட மக்கள் செல்ல வேண்டும் என்றால் அதிக தூரம், அதிக பயண நேரம் செலவு செய்ய வேண்டியுள்ள காரணத்தினால் விரைந்து செல்வதற்காக ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.

கன்னியாகுமரி ரயில் நிலையம்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருவதாலும், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதாலும் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் ரயிலை ”நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே வாரத்திற்கு மூன்று நாள் இயங்கும் ரயிலை, நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Body:குமரி மாவட்டம் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் முக்கியமான மாவட்டமாகும். சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் தெற்கே அதிக தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் தலைநகருக்கு பல்வேறு பயணிகள் நிமித்தம் செல்ல வேண்டும் என்றால் அதிக தூரம் மற்றும் அதிக பயண நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த காரணத்தினால் குமரி மாவட்ட மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறார்கள். குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் தாம்பரம் வாரம் மூன்று முறை செல்லத்தக்க வகையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சென்னைக்கும், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களிலும் இயக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் குமரியில் இருந்து தினசரி சுமார் 100 தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. மேலும் குமரி மாவட்ட பயணிகள் சென்னைக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மட்டுமே நம்பி உள்ளனர். இதனால் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே நாகர்கோவிலில் இருந்து தற்போது வாரம் மூன்று முறை தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயிலை நாஞ்சில் நாடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.