ETV Bharat / state

மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த பொறியாளர் கைது! - இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பொறியாளர் கைது

கன்னியாகுமரி: மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய விதவைப் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த பொறியாளரை காவல் துறையினர் நாகர்கோவிலில் கைது செய்தனர்.

இரண்ட்டம் திருமணம் செய்த பொறியாளர்
author img

By

Published : Nov 3, 2019, 9:45 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் தங்கபென்சன்(36). இவர் மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பொறியியல் படிப்பை நாகர்கோவிலில் படித்தார்.

பின்னர், மும்பையில் பணிபுரிந்து வந்த தங்கபென்சன், மும்பையைச் சேர்ந்த பாத்திமாவை(39) என்ற விதவைத் தாயை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், தனது பெயரையும் முகமது அலிஷேக் என மாற்றிக்கொண்டார். தங்க பென்சன்–பாத்திமா தம்பதிக்கு, ரீகன் ஷேக், அயன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பொறியாளர்

பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூருக்கு வந்த தங்கபென்சன், நெல்லை மாவட்டம் வள்ளியூர் கும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான ஷகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படத்தை கடந்த ஜூன் மாதம் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியான முதல் மனைவி பாத்திமா, மும்பையில் உள்ள தமிழ்ச் சங்கத்தினரை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். மும்பை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் உதவியுடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தங்கபென்சனை கைது செய்தனர்.

இது குறித்து தங்கபென்சனின் உறவினர்கள் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த பாத்திமாவின் முதல் கணவர் உயிருடன் உள்ளதாகவும் தங்கபென்சனை ஏமாற்றி சொத்துக்களை விற்றதாகவும் தெரிவித்தனர். மேலும், பாத்திமா, இருபது லட்ச ருபாய் பணம் கேட்டதாகவும், தங்கபென்சன் பணம் கொடுக்காததால் பொய்ப் புகார் கொடுத்து அவரை காவல் துறையினரிடம் சிக்க வைத்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது

Intro:tn_knk_03_engineer_arrested_script_TN0005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மும்பையை சேர்ந்த இஸ்லாமிய விதவை பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்த பொறியாளர் நாகர்கோவிலில் கைது. தனது மகனை ஏமாற்றி சொத்துக்களை விற்று பணம் பறித்ததாகவும், இருபது லட்ச ருபாய் பணம் கேட்டு கொடுக்காததால் பொய் புகார் கொடுத்து அவரை போலீசில் சிக்க வைத்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்கபென்சன் வயது 36. பொறியாளரான இவர் மும்பையில் பத்தாம் வகுப்பு வரை படித்து பாலிடெக்னிக் படிப்பை நாகர்கோவிலில் படித்து பின் பி.ஈ முடித்தார். பின் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணிபுரிந்து வந்தார். அப்போது கணவனை இழந்த மும்பையைச் சேர்ந்த பாத்திமா வயது 39 காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பாத்திமாவிற்கு ஏற்கனவே குழந்தை இருந்த நிலையில் பாத்திமாவை திருமணம் செய்வதற்காக தங்கபென்சன் முஸ்லீமாக மதம் மாறி தனது பெயரையும் முகமது அலிஷேக் என மாற்றிக்கொண்டார். தங்க பொன்சன் – பாத்திமா தம்பதிக்கு ரீகன் ஷேக், அயன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குழந்தைகளுடன் மெக்கா புனித பயணமும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மனைவி குழந்தைகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூருக்கு வந்தார். அதன் பின் நாகர்கோவிலில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ஷகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனக்கும் ஷகீலாவிற்கும் திருமணம் ஆன புகைப்படத்தை கடந்த ஜூன் மாதம் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியான முதல் மனைவி பாத்திமா மும்பையில் உள்ள தமிழ்ச் சங்கத்தினரை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். மும்பை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் உதவியுடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளீர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்க பென்சனை கைது செய்தனர். இது குறித்து தங்க பொன்சனின் உறவினர்கள் மும்பையை சேர்ந்த பாத்திமாவின் முதல் கணவர் உயிருடன் உள்ளதாகவும், தனது மகன் ஊருக்கு வர அளித்த பின் வர மறுத்து தங்களிடம் இருபது லட்ச ருபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், மும்பையில் உள்ள தங்கள் வீட்டை விற்று பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும், தற்போது பொய் புகார் கொடுத்து மகனை சிக்க வைத்ததாகவும் தெரிவித்தனர். Body:tn_knk_03_engineer_arrested_script_TN0005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மும்பையை சேர்ந்த இஸ்லாமிய விதவை பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்த பொறியாளர் நாகர்கோவிலில் கைது. தனது மகனை ஏமாற்றி சொத்துக்களை விற்று பணம் பறித்ததாகவும், இருபது லட்ச ருபாய் பணம் கேட்டு கொடுக்காததால் பொய் புகார் கொடுத்து அவரை போலீசில் சிக்க வைத்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்கபென்சன் வயது 36. பொறியாளரான இவர் மும்பையில் பத்தாம் வகுப்பு வரை படித்து பாலிடெக்னிக் படிப்பை நாகர்கோவிலில் படித்து பின் பி.ஈ முடித்தார். பின் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணிபுரிந்து வந்தார். அப்போது கணவனை இழந்த மும்பையைச் சேர்ந்த பாத்திமா வயது 39 காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பாத்திமாவிற்கு ஏற்கனவே குழந்தை இருந்த நிலையில் பாத்திமாவை திருமணம் செய்வதற்காக தங்கபென்சன் முஸ்லீமாக மதம் மாறி தனது பெயரையும் முகமது அலிஷேக் என மாற்றிக்கொண்டார். தங்க பொன்சன் – பாத்திமா தம்பதிக்கு ரீகன் ஷேக், அயன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குழந்தைகளுடன் மெக்கா புனித பயணமும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மனைவி குழந்தைகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூருக்கு வந்தார். அதன் பின் நாகர்கோவிலில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ஷகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனக்கும் ஷகீலாவிற்கும் திருமணம் ஆன புகைப்படத்தை கடந்த ஜூன் மாதம் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியான முதல் மனைவி பாத்திமா மும்பையில் உள்ள தமிழ்ச் சங்கத்தினரை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். மும்பை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் உதவியுடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளீர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்க பென்சனை கைது செய்தனர். இது குறித்து தங்க பொன்சனின் உறவினர்கள் மும்பையை சேர்ந்த பாத்திமாவின் முதல் கணவர் உயிருடன் உள்ளதாகவும், தனது மகன் ஊருக்கு வர அளித்த பின் வர மறுத்து தங்களிடம் இருபது லட்ச ருபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், மும்பையில் உள்ள தங்கள் வீட்டை விற்று பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும், தற்போது பொய் புகார் கொடுத்து மகனை சிக்க வைத்ததாகவும் தெரிவித்தனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.