கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தனியார் உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டி, தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை மாவட்டத் தேர்தல் அலுவலர் அரவிந்த் தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், “தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தனியார் உணவகங்கள், உணவு விடுதிகளில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், ரசீதுகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதன் மூலமாக தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன” எனக் கூறினார்.
இதையும் படிங்க...இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்