ETV Bharat / state

மகனின் கடனை அடைக்க உதவ முடியாத தாய், தந்தை தற்கொலை - கன்னியாகுமரி மாவட்ட செய்தி

மணவாளக்குறிச்சி அருகே மகனின் கடனை அடைக்க உரிய நேரத்தில் உதவ முடியாத தந்தையும் தாயும் மனம் உடைந்து விஷம் அருந்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்

மகனின் கடனை அடைக்க உதவ முடியாததால் தாய், தந்தை தற்கொலை

author img

By

Published : Jan 9, 2023, 11:19 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மகனின் கடனை அடைக்க உரிய நேரத்தில் உதவ முடியாத தந்தையும் தாயும் மனம் உடைந்து விஷம் அருந்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளகுறிச்சி அருகே வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் (63). இவரது மனைவி பிரேமலதா (58).

ஆறுமுக பெருமாள் சென்னை துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரில் வசித்துவந்தார். இவர்களுக்கு ஆதவன்(32), மாலன் (28) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருமே திருமணமாகி சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆதவன் சொந்த தொழில் வேண்டும் என்று நினைத்து சென்னையில் சுயமாக தொழில் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்த தொழில் கரோனா காலத்தில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை அடைக்க முடியாமல் ஆதவன் மன நிம்மதி இழந்து தந்தையிடம் விவரத்தை சொல்லி இருக்கிறார். தந்தையோ சொத்தை வித்து கடனை அடைக்கலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால், சொத்தை விற்க பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் குளறுபடி காரணமாக உரிய நேரத்தில் சொத்தை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மாதம் மாதம் கடனுக்குரிய வட்டி பல மடங்கு பெருகியதால், உரிய நேரத்தில் மகனுக்கு கடனை அடைக்க உதவ முடியாததால் மனமுடைந்த தந்தையும் தாயும் வீட்டில் விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த 2 மகன்களும் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்து புறப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருவதோடு உடல் கூறு ஆய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்டோக்கு ரூ.2000 அபராதம்; குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.