கன்னியாகுமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் துர்காஷ்டமி திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி இன்று (அக்.23) கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனிதநீர் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் விக்கிரகம் கொண்டுச் செல்லப்பட்டது.
முன்னதாக, பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ஐந்து கும்பங்களில் புனிதநீர் எடுத்து பகவதியம்மன் கோயிலில் பூஜை செய்தனர். பின்னர் இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோயிலை சென்றடையும்.
இதையும் படிங்க: கோயில் குளத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ!